எங்கள் ஏற்காடு பயணம் ( 21.பிப்ரவரி.2009 ) – நடந்தது என்ன ?

Posted: February 23, 2009 in General

எங்கள் அலுவலகத்திலிருந்து நாங்கள் அனைவரும் ஏற்காடு செல்வதற்கு திட்டம் வகுத்து, அதனை 21 ஆம் தேதி செயல்படுத்துவதென முடிவெடுத்தோம். நாங்கள் மொத்தம் 19 பேர் சென்றோம். எங்கள் மொத்த டீம் :

1. திரு. உதய் – எங்க தல
2. திருமதி. சவிதா – எங்க தலையோட பாதி
3. பேபி. சுருதி – தலயோட முதல் பொண்ணு
4. பேபி. சம்ருதி – தலயோட ரெண்டாவது பொண்ணு
5. திரு. ஜெயந்தா சௌத்திரி – இவர் எங்க சென்னை டீம் தல
6. திரு. சுதர்சனம் – இவர் எங்க புராடக்டுக்கே தல (மெய்ன் ஒர்க் பஞ்சர் ஒட்ரது)
7. திரு. கிஷோர் – இவரு எங்க டோட்டல் போகஸ்க்கே தல
8. திரு. பிரபு – இவருதான் எங்க புராடக்டுக்கு புது துணி கரெக்டா செட் ஆகுதானு பாக்ரவரு (R&D)
9. திரு. கோபி – இவரு ரோல் எங்களுக்கு தண்ணி காட்ற ரோல் – குவாலிட்டி கண்ட்ரேல்
10. திரு. கிருஷ்ணன் – இவருக்கும் “தண்ணி” காட்ற வேலை தான்.
11. திரு. துரைபாபு – இவரு நம்ம கிஷோருக்கு ரைட்ஹேண்டு
12. திரு. சுதர்சணம் – இவரு எங்க தருமபுரி டீம்க்கு பெரிய சீனியர் – வழிகாட்டி கைகாட்டி என்னவானாலும் வைச்சுக்கலாம்
13. அப்பால நான் – திரு. ஜான் கிறிஸ்டோhர் – நம்ம வேலை இப்பதைக்கு ஸ்பானிஷ்கு பஞ்சர் ஒட்றது.
14. திரு. கார்த்தி – ஆரக்கிளுக்கு ராசா இவரு
15. திரு. ரவிசங்கர் – நம்ம கை. புது மாப்பிள்ளை வேற.
16. திரு. வினோத் – இவரும் நம்ம கை தான்.
17. திரு. பரத் – இவரு ஜாவாவுக்கு பெருங்கை
18. திரு. சந்தோஷ் – இவரு பெரும் புராஜக்ட் பி.அஜ்.பி க்கு பெருங்கை

இம்புட்டு பேரும் 4 கார் எடுத்துகினு கிளம்புனோம். (எங்க தலையோட கார் மட்டும் தனியா சேலம் வரைக்கும் வந்துச்சு அப்பால நாங்க ஒன்னாகிட்டோம்). எங்க பிளான் காலைல 7 மணிக்கு கிளம்பறது. போட்ட பிளான்படியே கரெக்ட்டா 8 மணிக்கு (ஹி….ஹி….) கிளம்பிட்டோம்.
காலைல நம்ம வண்டிக்கெல்லாம் பெட்ரோல் டீசல் எல்லாம் போட்டுகினு மொத்த தொகைக்கும் நம்ம சுதரோட கிரெடிட்கார்ட தேய்ச்சுகினோம்.
அப்பால நேரா சேலத்துல காலை சாப்பாடு நம்ம சுதரோட (சென்னை) புண்ணியத்துல கிடைச்சுது. இந்த கேப்புல நம்ம தருமபுரி சுதர்சணத்த பிக்கப் பண்ணாம அப்டியே வந்துட்டோம். அப்பால அவரு பஸ்ஸ புடிச்சு ஹோட்டலுக்கு வந்து சேந்தாரு.
ஒரு வழியா நாங்க ஏற்காடு வந்து சேர்ந்தோம். இந்த சைக்கிள் கேப்ல நான் புக் பண்ண ஹோட்டல் பேரு, அந்த ஹோட்டல் போன் நம்பர் எல்லாம் காணோம். உடனே எங்க ஆபீஸ்ல இருக்கற எங்க மேனேஜர்கிட்ட சொல்லி இன்டெர்நெட்ல தேடி….. ஒன்னும் வேலைக்காகல. ஏற்காடு எறின உடனே, எங்க தலையோட லேப்டாப்ல நானே குதிச்சு நீந்தி ஒரு வழியா ஒரு 5 ஹோட்டல் பேர தேர்ந்தெடுத்து அதுல இருந்து நாங்க புக் பண்ண ஹோட்டல கண்டுபிடிச்சோம். ( அப்பாடா……….)
அதுக்கு பின்னால நாங்க லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், சில்ட்ரன்ஸ் சீட், ரோஸ்கார்டன்னு ஒரே சுத்துதான். அந்த ரோஸ் கார்டன்ல எங்க சுதர் கிங்காங் மாதிரி தொங்கினே ஒரு போஸ் குடுத்தாரு பாருங்க… நானே கிங்காங் பார்ட்-3 எடுக்கறாங்களோனு நினைச்சேன். – இதுல அவருக்குபின்னாடியே ஒரு குட்டி குரங்கு வேற (இத வேறயாரும் இல்ல நம்ம துரைபாபு தான்).
ஒரு வழியா நாங்க இந்த இடத்தையெல்லாம் பாத்துட்டு நாங்க புக் பண்ணியிருந்த ஹோட்டலுக்கு போய், அந்த வீட்டை பார்த்தோம். இங்க தான் சனி எங்களை கொஞ்சமா முறைச்சிருக்கான். நாங்க சுவாரஸ்யத்துல கவனிக்காம மதிய சாப்பாடுக்கு அதே ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிட்டோம்….(இது நடந்தது ஒரு 2:30 மணியளவில் இருக்கும்). அப்பால நாங்க பக்கோடா பயிண்ட் பாக்க போய்ட்டு ஒரு 3:45 மணிவாக்குல அந்த ஹோட்டலுக்கு வந்தா…. அந்த கொடுமையை என் பிளாக்கால எப்படிங்க சொல்றது, இன்னுமே சாப்பாடு ரெடியாகலயாம். நாங்க வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், அதான் சொல்றேனே நாங்க வெயிட் பண்ணோம்… திரும்ப திரும்ப வெயிட் பண்ணோம்…. அடடா அப்டியேதாங்க நாங்க எல்லாருமே வெயிட் பண்ணோம். ஒரு வழியா 5 மணிக்கு எல்லாருக்கும் சாப்பாடு ரெடியாகி சாப்பிட்டு முடிச்சோம். இந்த முறை எங்க சென்னை தல ஜெயந்தா தான் ட்ரீட்.
அதுக்கு பிறகு என்ன…. நாங்க எற்காடு லேக்குக்கு வந்து ஒரு போட்டிங் போய்ட்டு முடிச்சு டைம் பாத்தா 6:30. அப்பால எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வுட்டோம் ஒரு ஜீட்….. நேரா தருமபுரி வந்தப்போ டைம் சரியா 8:45. அங்க ஒரு 10 பேர் தங்கிட்டு அடுத்த நாள் கிளம்பி தருமபுரி வழியா சென்னைக்கு போனார்கள்…..
இதாங்க நடந்தது…………….

ஏற்காடு டூர் வந்த எங்க டீம் மெம்பர்ஸ் :

இது எங்க செக்ட்ரானிக்ஸ் டீம்:

இது எங்க தருமபுரி டீம்:

இது எங்க ஸ்பானிஷ் டீம்:

Stolen from     http://tamilanjohn.blogspot.com/

Advertisements
Comments
  1. IQBAL SELVAN says:

    நன்று !!!!

  2. Vinodh Kumar M says:

    Nice da bharath…..

  3. deepak "things changed" says:

    அருமை நண்பரே

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s