You will never get a chance to see Chennai streets like this in any other days.

When India was playing Pak


கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி  கட்சித் தலைவராக கணாநிதிருயைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்! ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்! ( ஓஹோ உப்பு தின்னவன் தண்ணியை குடிக்கனும்னு சொல்றீங்களா?)
ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?’திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!
கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. ‘ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!
42 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. ‘தலைமை நாற்காலியைப் பெரியாருக்காகக் காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி தி.மு.க-வில் இருக்கும்’ என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை.
அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற சண்டை வந்தபோது, தலைவராக கருணாநிதியும் ,பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10-வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.
1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்… அன்பகம் ஸ்டாலினுக்கு.
இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்… கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.
கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார்.
தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க… குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய… ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!

குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தலை எடுத்து வலம் வருகிறார்கள்.

ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ.டி. காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் ஃபர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை.
ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்ததாகத் தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினெட்டுக்குள் நுழைத்ததும்… அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராஜாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும்.
கனிமொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்வியைச் சினம்கொள்ளவைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார்.
கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியைக் கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மரியாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, தி.மு.க-வின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கிய மான அதிகார மையம்!
இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப்போல வேறு யாரும் ஆகவில்லை!திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். ‘அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே ‘கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன் – கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.
அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும்… தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் சொல்ல முடியவில்லை.
பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக தி.மு.க-காரராக அறிமுகமான அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.
தமிழரசுவின் மகன் அருள்நிதி, ‘வம்சம்’ படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர் டி.வி -யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு.க.முத்து. அவரது மகன் அறிவுநிதி, சினிமா வில் பாடுகிறார். சென்னையில் திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உறுப்பினரே கிழித்துவிட்டார். ‘நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது’ என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியது இல்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் அவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை.
உடல்நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டி.வி-க்கான பங்குகளில் 60 சதவிகிதம் அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டி.வி. 214 கோடிகளை வாங்கியது என்பதை சி.பி.ஐ. தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். ‘இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே’ என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.ஐ. அடம்பிடிக்க…. தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.ஐ. விடுகிறதா என்பது தெரிய வில்லை. முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!
இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன் ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ் கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின் உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்… முற்றுப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!
கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம் – அவரது மகன் முத்து, ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில் தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்!
மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக் கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சை தொடர்ந்தது!
தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியைவிட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் கருணாநிதி. ஆட்சி மாறி கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகுதான் மீண்டும் அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!
தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அழகிரி விடுதலை செய்யப்பட்டார். இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!
ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்த அண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷ§டன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை!
மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு அப்பீலில் இன்று வரைக்கும் இருக்கிறது!
மத்திய அமைச்சர் பதவியை அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக கருணாநிதி டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும்… அதைவைத்து ஆங்கில, இந்தி மீடியாக்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட கருணாநிதி, முதன்முதலாக ஏளனம் செய்யப்பட்டார்!
சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏதாவது பேரனை வைத்து ஏதாவது ஒரு புகார் எழுந்து அடங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. போலீஸாரும் ஹோட்டல் அதிபர்களும் கை பிசைந்து நிற்கிறார்கள்!
கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இன்று வரை இரண்டு தரப்பாலும் மறுக்கப்படவில்லை!
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கலைஞர் டி.வி-யும் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது சி.பி.ஐ-க்கே தெரியாது!
அடுத்து புதிய வாரிசுகள் மெள்ள உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது.
ஸ்டாலின் மருமகள் கிருத்திகா, ஒரு பத்திரிகையாளராக வலம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் ஷைன் என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார். அவரது கணவர், சபரீசன் பெயர் அவ்வப்போது சர்ச்சை களில் அடிபடும். ‘
தமிழரசுவின் மகள் பூங்குழலியும் அவரது கணவரும் அடுத்து வளர்ந்து வருகிறார்கள். கடைசியாக கனிமொழியின் மகன் ஆதித்யன் பற்றிச் சொல்லியாக வேண்டும்.
சில மந்திரிகள் அவருடன் கிரிக்கெட் விளையாடி காக்கா பிடிக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்!

Thanks,

ஆனந்த விகடன்

நண்பர்களே!!!

ேதசிய அவமானமான ஸ்பெக்ட்ரம் பற்றி நாம் அறிவோம், அதில் ஒண்ணேமுக்கால் லட்சம் கோடி ரூபாய் அளவுக்கெல்லாம் ஊழல் செய்யப்படவேயில்லை என்றெல்லாம் மக்களே பேச ஆரம்பித்துவிட்டனர். ராஜா கைது தான் செய்யப்பட்டாரே தவிர குற்றம் நிரூபிக்கப்படவில்லை, அதுவரை நாங்கள் அவரை அரவணைத்துக் காப்போம் என்கிறார் முதல்வர். இது தினம் ஒரு அறிக்கை வரும் தேர்தல்நேரம்,மக்கள் சிந்திக்க வேண்டிய காலம், அப்படி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மெய்யாகவே நடந்தது என்ன ?!!! என்பதை துபாயில் பணிபுரியும் சிவக்குமார் என்னும் பொறியாளர் அருமையாக ஆய்வு செய்து எழுதியுள்ளார், இது இப்போது இமெயிலில் வரத்துவங்கிவிட்டது, இனியேனும் நன்கு படித்தவர்கள் அவசியம் சிரமம் பாராமல் சிந்தித்து வாக்களித்து நாட்டைக்காக்கவேண்டும். அவசியம் இதைப்படித்துவிட்டு ஃபேஸ்புக், ஆர்குட், ட்விட்டர் தளங்களில் ஃபார்வர்டும் செய்யவும்.

*மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார் நம் முதல்வர். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.

*

1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது. ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வசதி படைத்தவர்களாயிற்றே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரயம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.

நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது. 2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல்.

இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நியாயக் கணக்கு:*

இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம்.

அப்போது 15×0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60×6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30×360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12×10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ து குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை*2,59,200* கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம்.

இத்தோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்…….இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள். என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது”INFINITIVE”. நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா?

மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும்.

அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது. இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். “Above middle Class” மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள்.

ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம் ,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம்- 2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

*

துரோகம்- 3:  தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் “swan, Unitech” போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை.

இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு “S.TEL <http://s.tel/> போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.

துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.

துரோகம்-6:  நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.

துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது.

ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி?

ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது.

ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை.

இதுதான் ஊழலின் விளைவு. இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர்.

அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.

இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது.

இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில்

சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன்.

நன்றி.

இந்தியாவின் தென்முனையில் கண்ணீர் துளிபோல இருக்கும் குட்டி நாடு இலங்கை.

சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மூர் இனத்தவர்கள் என்று பல்வேறு இனத்தவர்கள் வாழும் நாடு.

1948-ம் ஆண்டு இங்கிலாந்திடம் இருந்து இலங்கை விடுதலை பெற்றது. அங்குள்ள சிங்களர்கள், தமிழர்கள் சுதந்திரக் காற்றை அனுபவிக்கத் தொடங்கினார்கள். ஆனால் பெரும்பான்மை இனமான சிங்களர்களுக்கு மட்டும் தமிழர்கள் மீது எரிச்சல் ஏற்பட தொடங்கியது.

ஆட்சி அதிகாரத்தில் தமிழர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அவர்கள் விரும்பவில்லை. இலங்கை பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நியமான உரிமைகளை பறித்தனர்.

கல்வி, வேலை வாய்ப்பு உள்பட பல விஷயங்களில் ஈழத்தமிழர்கள் ஓரம் கட்டப்பட்டனர். இது என்ன அநிநாயம் என்று ஈழத் தமிழர்களின் தலைவர்கள் கேள்வி கேட்டனர். அதை சிங்களர்கள் கண்டுகொள்ளவில்லை.

நம்ம ஊரில் மகாத்மா காந்தி சத்தியாகிரக வழியில் போராடி சுதந்திரம் பெற்று தந்தது போல, அங்கு ஈழத்து காந்தி என்று அழைக்கப்படும் செல்வா உள்பட பல தமிழ் தலைவர்கள் தமிழர்களின் உரிமைக்காக அமைதி வழியில் போராடினார்கள்.

கல்வி, வேலை வாய்ப்பில் புறக்கணிக்கப்படும் பட்சத்தில் சொந்த நாட்டில் ஈழத்தமிழர்கள் எப்படி வாழ முடியும் என்று குரல் எழுப்பினார்கள். ஆனால் தமிழ் இனம் ஒரு அடிமை இனம்போல இருக்க வேண்டியதுதான் என்று சொல்லாமல், சொல்லி சிங்கள தலைவர்கள் தொடர்ந்து தமிழர்களை புறக்கணித்தனர்.

இதையடுத்து தமிழர் பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டம் ஊர்வலங்கள் நடந்தன. தமிழர்கள் அடித்து நொறுக்கப்பட்டனர்.

1954-ம் ஆண்டு பிறந்த பிரபாகரன் சிறு பையனாக இருந்தபோது, ஈழத்தமிழர்கள் மீது போலீசார் நடத்திய வெறியாட்டங்கள் அதிகரித்திருந்தன. அப்போது பிரபாகரன் கேட்ட கேள்வி, ஏன் அடிக்கிறார்கள்? நாம் ஏன் திருப்பி அடிக்கவில்லை?
                                                                                                                                                                     இந்த சிந்தனை பிரபாகரன் போலவே பெரும்பாலான சிறுவர்கள் மனதில் ஏற்பட்டிருந்தது. அவர்கள் வளர்ந்து வாலிப வயதை தொட்டபோது, குட்ட குட்ட குனிவதா? உரிமைக்காக இனி ஆயுதம் ஏந்துவோம் என்றனர்.


பிரபாகரன் ஒருபடி மேலே சென்று, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு, கிழக்கு பகுதியை எங்களுக்கு தனியாக பிரித்து கொடுத்து விடுங்கள். நாங்கள் தமிழ் ஈழம் பெயரில் தனி சுதந்திர நாட்டை உருவாக்கிக் கொள்கிறோம் என்று ஆவேசமானார்.

இலங்கை மொத்த மக்கள் தொகையில் 73.8 சதவீதம் பேர் சிங்களர்கள். 13.9 சதவீதம் பேர் ஈழ தமிழர்கள். 4.6 சதவீதம் பேர் இந்திய வம்சா வழி தமிழர்கள். சுமார் 2 கோடி பேர் கொண்ட மக்கள் தொகையில் சுமார் 50 லட்சம் பேர் ஈழத் தமிழர்கள். இவர்களுக்காக தனி நாட்டை உருவாக்க போவதாக 1972-ம் ஆண்டு பிரபாகரன் அறிவித்தார். விடுதலைப்புலிகள் இயக்கம் பிறந்தது.

                                                                        இலங்கையை வென்ற தமிழ் அரசன் சோழனின் கொடி புலிக்கொடி. அதையே பிரபாகரன் தன் கொடியிலும் பதித்தார். புலி தலையை சுற்றி 33 துப்பாக்கிக் குண்டு வளையம் அமைத்தார்.

அப்போது ஆட்சியில் இருந்த இந்திரா காந்தியும், எம்.ஜி.ஆரும், ஈழப் போராளிகளுக்கு உதவினார்கள். எதிரி நாடுகள் இலங்கை மண்ணில் தளம் அமைத்து விடக்கூடாது என்ற தொலைநோக்கு பார்வையில் இந்திரா காந்தி ஈழப் போராளிகளுக்கு ஆயுதம் கொடுத்து பயிற்சியும் அளித்தார்.

ஏராளமான இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தனர்.. 1983-ம் ஆண்டு முதல் ஈழம் போர் தொடங்கியது.

விடுதலைப்புலிகள் நடத்திய முதல் கண்ணிவெடி தாக்குதலில் 13 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் சிங்கள மக்கள் வெறியர்களாக மாறினார்கள்.

கொழும்பில் அரசு பணியில் இருந்த, கடை வைத்திருந்த தமிழர்கள் ஓட, ஓட அடித்து விரட்டப்பட்டனர். 600 தமிழர்கள் கொல்லப்பட்டனர். கொழும்பில் ரத்த ஆறு ஓடியது.

1985-ம் ஆண்டு சிங்கள அரசு முதன் முதலாக ஈழப் போராளிகளிடம் பேச முன் வந்தது. ஆனால் அதை விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை.

இந்த சமயத்தில் டெலோ, ஈராஸ், இ.பி.ஆர்.எல்.எப்., டி.யூ.எல்.எப் என்று பல போராளிக் குழுக்கள் இருந்தன. இவர்களால் விடுதலைப்போராட்டம் திசை திரும்புவதாக கருதிய புலிகள் ஸ்ரீசபாரத்தினம், அமிர்தலிங்கம், பத்மநாபா ஆகியோரை சுட்டுக் கொன்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருந்தது. பிரதமர் பதவிக்கு வந்த ராஜீவ் காந்தி இலங்கை கொள்கையில் புதிய அணுகுமுறையை ஏற்படுத்தினார். ஒரு கட்டத்தில் புலிகளை ஒடுக்க இந்திய அமைதிப்படையை அனுப்பி வைத்தார்.

1990 வரை 3 ஆண்டுகள் இலங்கையில் தங்கியிருந்த இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளிடம் இருந்த ஆயுதங்களில் 90 சதவீதத்தை பறித்தது. பிறகு சுமார் 1000 ராணுவ வீரர்களை இழந்து விட்டு இந்தியா திரும்பியது. இது ஈழப்போரின் 2-வது கட்டமாக கருதப்படுகிறது.

இலங்கை பிரச்சினையை தீர்க்க ஜெயவர்த்தனேவுடன் ராஜீவ் காந்தி ஒரு ஒப்பந்தம் செய்தார். இது விடுதலைப்புலிகளிடம் அதிருப்தியை உருவாக்கியது.

1991-ம் ஆண்டு ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அதன் பிறகு விடுதலைப்புலிகள் மீதான இந்தியாவின் பார்வை முழுமையாக மாறியது.

விடுதலைப்புலிகள் இயக்கம் மீது சர்வதேச பார்வை மாறவும் இது வழி வகுத்தது. என்றாலும் விடுதலைப்புலிகள் ஈழம் ஒன்றே குறிக்கோள் என்று போராட்டத்தை தீவிரப் படுத்தினார்கள்.

1993-ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் மனித வெடிகுண்டு மூலம் அதிபர் பிரேமதாசா கொல்லப்பட்டார். இந்த நிலையில் சிங்கள ராணுவமும் தன்னை நவீனப்படுத்தி வலுவாக்கிக் கொண்டது. இதன் காரணமாக 1995-ல் யாழ்ப்பாணம் முழுவதையும் சிங்கள ராணுவம் கைப்பற்றியது..

அதற்கு பதிலடியாக 1996-ல் முல்லைத் தீவில் இருந்த ராணுவ முகாமை விடுதலைப்புலிகள் பிடித்தனர். அங்கு இருந்த 1200 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் அதிரடி நடவடிக்கைகளை உன்னிப்பாக கவனித்து வந்த அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் 1997ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்தன.

ஆனால் எதை பற்றியும் கவலைப்படாத புலிகள் தங்கள் லட்சியப் பயணத்தில் உறுதியுடன் இருந்தனர். 1998-ல் கிளிநொச்சி ராணுவ முகாமை கைப்பற்றினார்கள். அங்கு இருந்த சுமார் 1000 சிங்கள ராணுவ வீரர்களை கொன்றனர்.

இதனால் வன்னிப் பகுதியில் புலிகள் வசம் பெரிய அளவில் நிலப்பரப்பு கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சுமார் 5 ஆண்டுகளில் தன் ஆயுத பலத்தை பெருக்கி புலிகள் இந்த அதிரடிகளை நடத்தியதை பார்த்து உலக நாடுகள் ஆச்சரியப்பட்டன..

புலிகள் வேகத்தை பார்த்த இங்கிலாந்து 2001-ல் புலிகளை தீவிரவாதிகள் என்று அறிவித்தது. இதை காதில் வாங்கிக் கொள்ளாத விடுதலைப்புலிகள் அதே ஆண்டு கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். 6 விமானங்கள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. உலகமே விடுதலைப்புலிகளை திரும்பிப்பார்த்தது.

இதையடுத்து உலகின் பல நாடுகள் சிங்கள அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே சமரசம் செய்து வைக்க முன் வந்தது. ஆனால் விடுதலைப்புலிகள் இந்தியாவின் சமரசத்தை எதிர்பார்த்தது.

இந்தியா தலைமையில் ஒரு சமரச தீர்வு ஏற்பட வேண்டும் என்று பிரபாகரன் விருப்பம் தெரிவித்தார். ஆனால் சமரசத்தில் ஈடுபட இந்தியா விரும்பவில்லை. வெளியுறவு கொள்கை மாற்றம் காரணமாக இந்தியா அமைதி காத்தது.

இதையடுத்து நார்வே நாடு புலிகளிடம் பேச முன் வந்தது. அதை புலிகளும் ஏற்றுக்கொண்டனர். நார்வே நாட்டின் சமரச முயற்சி காரணமாக சிங்கள ராணுவத்தினரும் விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தம் செய்தனர்.

2002-ம் ஆண்டு நார்வே நாட்டில் வைத்து சமரச பேச்சு நடந்தது. இலங்கை வடக்கு- கிழக்கில் தமிழர்களுக்கு சுயாட்சி வழங்க தீர்மானிக்கப்பட்டது. இந்த அதிகார பகிர்வு திட்டத்துக்கு இரு தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

2003-ம் ஆண்டு இந்த சமரச திட்டத்தை ஏற்பதில் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

சொத்து, பணம் சேர்த்து சொகுசாக வாழ ஆசைப்பட்ட கருணா என்ற முரளீதரன் 2004-ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து விலகினார். அவருடன் கிழக்கு மாகாணப் பகுதியில் இருந்த சுமார் 3 ஆயிரம் இளைஞர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தனர். புலிகள் இயக்கத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பாக இது கருதப்பட்டது.

அடுத்தடுத்து கருணா துரோக செயல்களில் ஈடுபட்டார். விடுதலைப்புலிகளின் பலம் எது பலவீனம் எது என்பதை சிங்கள ராணுவத்திடம் முழுமையாக சொல்லி கொடுத்தார்.

விடுதலைப்புலிகளை எங்கிருந்து, எப்படி தாக்கினால் வேரோடு அழிக்கலாம் என்றும் சொல்லிக் கொடுத்தார்.

இதையடுத்து இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகளிடம் இலங்கை போர் கருவிகளை வாங்கியது. சர்வதேச கொள்கை மாற்றங்களும் சிங்கள அரசுக்கு சாதகமாக மாறின.

புதிதாக 2007-ல் ஆட்சிக்கு வந்த மகிந்த ராஜபக்சேவுக்கு சீனா அதிகமான ஆயுத உதவி செய்தது. உடனடியாக ராஜபக்சே போரைத் தொடங்கினார். 2007-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார்.

2008ல் போர் நிறுத்தம் முறிக்கப்பட்டது. விமானங்கள் மூலம் குண்டுகள் வீசப்பட்டன. கிழக்கு பகுதி முழுவதையும் விடுதலைப்புலிகள் இழந்தனர்..

4-வது ஈழப்போரை தொடங்குவதாக புலிகள் அறிவித்தனர். கடந்த ஜனவரி மாதம் போரில் கிளிநொச்சி, ராணுவத்திடம் வீழ்ந்தது. அதன் பிறகு முல்லைத் தீவு வீழ்ந்தது.

பிறகு மூன்றே மாதத்தில் வடக்கு பகுதி முழுவதையும் சிங்கள ராணுவம் ஆக்கிரமித்து விட்டது. நேற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளி வாய்க்காலில் ராணுவம் தன் போரை நிறைவு செய்து விட்டது.

விடுதலைப்புலிகளின் கொடி சின்னத்தில் புலி தலையை சுற்றி 33 குண்டு வைத்ததன் மூலம் 33 ஆண்டுகளில் ஈழம் மலர்ந்து விடும் என்று கூறுவதற்காகத்தான் என்று சொல்வார்கள்..

நேற்று போர் முடிந்த 17-05-2009 ன் கூட்டுத் தொகையும் 33 என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: மாலை மலர்

எங்கள் அலுவலகத்திலிருந்து நாங்கள் அனைவரும் ஏற்காடு செல்வதற்கு திட்டம் வகுத்து, அதனை 21 ஆம் தேதி செயல்படுத்துவதென முடிவெடுத்தோம். நாங்கள் மொத்தம் 19 பேர் சென்றோம். எங்கள் மொத்த டீம் :

1. திரு. உதய் – எங்க தல
2. திருமதி. சவிதா – எங்க தலையோட பாதி
3. பேபி. சுருதி – தலயோட முதல் பொண்ணு
4. பேபி. சம்ருதி – தலயோட ரெண்டாவது பொண்ணு
5. திரு. ஜெயந்தா சௌத்திரி – இவர் எங்க சென்னை டீம் தல
6. திரு. சுதர்சனம் – இவர் எங்க புராடக்டுக்கே தல (மெய்ன் ஒர்க் பஞ்சர் ஒட்ரது)
7. திரு. கிஷோர் – இவரு எங்க டோட்டல் போகஸ்க்கே தல
8. திரு. பிரபு – இவருதான் எங்க புராடக்டுக்கு புது துணி கரெக்டா செட் ஆகுதானு பாக்ரவரு (R&D)
9. திரு. கோபி – இவரு ரோல் எங்களுக்கு தண்ணி காட்ற ரோல் – குவாலிட்டி கண்ட்ரேல்
10. திரு. கிருஷ்ணன் – இவருக்கும் “தண்ணி” காட்ற வேலை தான்.
11. திரு. துரைபாபு – இவரு நம்ம கிஷோருக்கு ரைட்ஹேண்டு
12. திரு. சுதர்சணம் – இவரு எங்க தருமபுரி டீம்க்கு பெரிய சீனியர் – வழிகாட்டி கைகாட்டி என்னவானாலும் வைச்சுக்கலாம்
13. அப்பால நான் – திரு. ஜான் கிறிஸ்டோhர் – நம்ம வேலை இப்பதைக்கு ஸ்பானிஷ்கு பஞ்சர் ஒட்றது.
14. திரு. கார்த்தி – ஆரக்கிளுக்கு ராசா இவரு
15. திரு. ரவிசங்கர் – நம்ம கை. புது மாப்பிள்ளை வேற.
16. திரு. வினோத் – இவரும் நம்ம கை தான்.
17. திரு. பரத் – இவரு ஜாவாவுக்கு பெருங்கை
18. திரு. சந்தோஷ் – இவரு பெரும் புராஜக்ட் பி.அஜ்.பி க்கு பெருங்கை

இம்புட்டு பேரும் 4 கார் எடுத்துகினு கிளம்புனோம். (எங்க தலையோட கார் மட்டும் தனியா சேலம் வரைக்கும் வந்துச்சு அப்பால நாங்க ஒன்னாகிட்டோம்). எங்க பிளான் காலைல 7 மணிக்கு கிளம்பறது. போட்ட பிளான்படியே கரெக்ட்டா 8 மணிக்கு (ஹி….ஹி….) கிளம்பிட்டோம்.
காலைல நம்ம வண்டிக்கெல்லாம் பெட்ரோல் டீசல் எல்லாம் போட்டுகினு மொத்த தொகைக்கும் நம்ம சுதரோட கிரெடிட்கார்ட தேய்ச்சுகினோம்.
அப்பால நேரா சேலத்துல காலை சாப்பாடு நம்ம சுதரோட (சென்னை) புண்ணியத்துல கிடைச்சுது. இந்த கேப்புல நம்ம தருமபுரி சுதர்சணத்த பிக்கப் பண்ணாம அப்டியே வந்துட்டோம். அப்பால அவரு பஸ்ஸ புடிச்சு ஹோட்டலுக்கு வந்து சேந்தாரு.
ஒரு வழியா நாங்க ஏற்காடு வந்து சேர்ந்தோம். இந்த சைக்கிள் கேப்ல நான் புக் பண்ண ஹோட்டல் பேரு, அந்த ஹோட்டல் போன் நம்பர் எல்லாம் காணோம். உடனே எங்க ஆபீஸ்ல இருக்கற எங்க மேனேஜர்கிட்ட சொல்லி இன்டெர்நெட்ல தேடி….. ஒன்னும் வேலைக்காகல. ஏற்காடு எறின உடனே, எங்க தலையோட லேப்டாப்ல நானே குதிச்சு நீந்தி ஒரு வழியா ஒரு 5 ஹோட்டல் பேர தேர்ந்தெடுத்து அதுல இருந்து நாங்க புக் பண்ண ஹோட்டல கண்டுபிடிச்சோம். ( அப்பாடா……….)
அதுக்கு பின்னால நாங்க லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், சில்ட்ரன்ஸ் சீட், ரோஸ்கார்டன்னு ஒரே சுத்துதான். அந்த ரோஸ் கார்டன்ல எங்க சுதர் கிங்காங் மாதிரி தொங்கினே ஒரு போஸ் குடுத்தாரு பாருங்க… நானே கிங்காங் பார்ட்-3 எடுக்கறாங்களோனு நினைச்சேன். – இதுல அவருக்குபின்னாடியே ஒரு குட்டி குரங்கு வேற (இத வேறயாரும் இல்ல நம்ம துரைபாபு தான்).
ஒரு வழியா நாங்க இந்த இடத்தையெல்லாம் பாத்துட்டு நாங்க புக் பண்ணியிருந்த ஹோட்டலுக்கு போய், அந்த வீட்டை பார்த்தோம். இங்க தான் சனி எங்களை கொஞ்சமா முறைச்சிருக்கான். நாங்க சுவாரஸ்யத்துல கவனிக்காம மதிய சாப்பாடுக்கு அதே ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிட்டோம்….(இது நடந்தது ஒரு 2:30 மணியளவில் இருக்கும்). அப்பால நாங்க பக்கோடா பயிண்ட் பாக்க போய்ட்டு ஒரு 3:45 மணிவாக்குல அந்த ஹோட்டலுக்கு வந்தா…. அந்த கொடுமையை என் பிளாக்கால எப்படிங்க சொல்றது, இன்னுமே சாப்பாடு ரெடியாகலயாம். நாங்க வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், வெயிட் பண்ணோம், அதான் சொல்றேனே நாங்க வெயிட் பண்ணோம்… திரும்ப திரும்ப வெயிட் பண்ணோம்…. அடடா அப்டியேதாங்க நாங்க எல்லாருமே வெயிட் பண்ணோம். ஒரு வழியா 5 மணிக்கு எல்லாருக்கும் சாப்பாடு ரெடியாகி சாப்பிட்டு முடிச்சோம். இந்த முறை எங்க சென்னை தல ஜெயந்தா தான் ட்ரீட்.
அதுக்கு பிறகு என்ன…. நாங்க எற்காடு லேக்குக்கு வந்து ஒரு போட்டிங் போய்ட்டு முடிச்சு டைம் பாத்தா 6:30. அப்பால எல்லார்கிட்டயும் சொல்லிட்டு வுட்டோம் ஒரு ஜீட்….. நேரா தருமபுரி வந்தப்போ டைம் சரியா 8:45. அங்க ஒரு 10 பேர் தங்கிட்டு அடுத்த நாள் கிளம்பி தருமபுரி வழியா சென்னைக்கு போனார்கள்…..
இதாங்க நடந்தது…………….

ஏற்காடு டூர் வந்த எங்க டீம் மெம்பர்ஸ் :

இது எங்க செக்ட்ரானிக்ஸ் டீம்:

இது எங்க தருமபுரி டீம்:

இது எங்க ஸ்பானிஷ் டீம்:

Stolen from     http://tamilanjohn.blogspot.com/